நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. முன்னதாக, புயலை காரணமாக காட்டி தமிழக தலை மைச் செயலர் தேர்தல் ஆணையத் துக்கு கடிதம் எழுதியதால், தற்போது நடக்கும் 5 மாநில தேர்தல்களுடன், இந்த தேர்தலை சேர்த்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், ‘‘ஒரு தொகுதிக்கான முடிவு தொடர் பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கு முடிவுக் காக நாங்கள் காத்திருக்கிறோம். முன்னதாக, புயல் காரணமாக 2 தொகுதி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது புயல் தாக்கி யுள்ளது. ஒருவேளை அப்போது அறிவித்து, இந்த நேரத்தில் தேர்தலை நடத்தியிருந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டி ருக்கும். எங்களது முடிவு அவற்றில் இருந்து காப்பாற்றியுள்ளது.

குறிப்பாக, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு வெகு முன்னதாகவே 20 தொகுதிகளுக்குமான இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in