

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்காக மாநில அரசு என்னென்ன கோரிக்கைகள் வைத் தது? அந்த கோரிக்கையை நிறை வேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திரு முருகன் உயர் நீதிமன்றக் கிளை யில் தாக்கல் செய்த மனு: புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள் ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசியப் பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும், புயலில் உயிரிழந் தோரின் குடும்பத்துக்கு ரூ.25 லட் சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட் சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக கடலோர மாவட்டங்க ளில் மத்திய அரசின் தேசிய புயல் பாதிப்புக் குறைப்புத் திட்டத்தின் கீழ் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மின் இணைப்பைச் சரி செய்ய போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படையினர், துணை ராணுவப் படை வீரர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஜா புயல் சேதம் பாதித்த பகுதி களைப் புனரமைக்க மாநில அரசு என்னென்ன உதவிகள் கோரியுள் ளது? அந்த கோரிக்கை அடிப்படை யில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும் தஞ்சை, நாகை, புதுக் கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உணவு, குடிநீர், உடை, தங்குமிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைச் செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இதுதொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்கள் நவ.22-ல் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.