

திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரி பகுதியில் உள்ள பல சாலைகள் சேறும் சதியுமாக உருமாறி வருவ தால், மக்கள் பல்வேறு இன்னல்க ளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சியின் 3-வது வார்டுக்கு உட்பட்டது நெமிலிச்சேரி. இங்கு உள்ள ரயில் நிலையத்தை ஒட்டி அன்னை இந்திரா நகர், சீனிவாசா நகர், அஷ்வினி நகர், பாலகிருஷ்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், சீனிவாசா நகர், அஷ்வினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சாலைகள், நீண்ட காலமாக மண் சாலைகளாகவே உள்ளன. இதனால், அச்சாலைகள் சிறு மழைக்கு கூட தாங்காமல் சேறும் சகதியுமாக உருமாறி வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்க ளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, பேரூராட்சி அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என, புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.