Published : 08 Aug 2014 09:30 AM
Last Updated : 08 Aug 2014 09:30 AM

இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை: பெங்களூரில் பதுங்கியிருந்த 3 பேர் சுற்றிவளைப்பு - அடைக்கலம் கொடுத்ததாக மேலும் மூவர் கைது

இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் கொலை தொடர்பாக பெங்களூரில் பதுங்கியிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், கடந்த ஜூன் 18-ம் தேதி அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு உதவியதாக பாடி பகுதியில் செல்போன் கடை வைத்திருக்கும் நசீர், கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த குத்புதீன், காஜாமொய்தீன் ஆகி யோர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் 17 வயது மாணவர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் அனைவரும் சுரேஷ்குமாரின் நடமாட்டம் பற்றி கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்கள்.

போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமை யிலான தனிப்படை போலீஸார், 4 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்று கண்காணித்து வந்தனர்.

பெங்களூர் ராஜேந்திரா நகர் பகுதியில் பதுங்கியிருந்த முகமது சமீம், சையது அலி நவாஸ், அப்துல் ஹக்கீம் ஆகியோரை புதன்கிழமை இரவு தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். இவர்கள்தான் சுரேஷ் குமாரை வெட்டிக் கொலை செய்த தாக கூறப்படுறது. மேலும் கொலைக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பல உதவிகள் செய்த தாக அபுதாகிர், சமியுல்லா, சாதிக் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

வியாழக்கிழமை காலை சென்னை கொண்டுவரப்பட்ட 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்டவர்களில் சமீம், நவாஸ் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் எம்.ஆர்.காந்தியை வெட்டிக் கொலை செய்ய முயன்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸாரி டம் கேட்டபோது, ‘‘கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் ஒரு அமைப்பின் கீழ் செயல் படுகின்றனர். பல்வேறு இந்து அமைப்பின் தலைவர்கள் கொலை குறித்தும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சுரேஷ்குமாரை கொலை செய்வதற்கு 5 மாதமாக திட்டமிட்டுள்ளனர். கொலை செய்து விட்டு தப்பிச் செல்லவேண்டிய வழிகளைக்கூட முன்கூட்டியே திட்டமிட்டு வைத் துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

முஸ்லிமாக மதம் மாறியவர்

கொலையாளிகளுக்கு உதவிய தாக கைது செய்யப்பட்டுள்ள சமியுல்லா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் கண்ணன். இந்துவான அவர், 1994ம் ஆண்டு மதம் மாறி இருக்கிறார். கொலையாளிகள் 3 பேரும் தங்குவதற்கு இவர் தனது அறையை கொடுத்திருக் கிறார். வேலூர் மாவட்டம் வாணியம் பாடியைச் சேர்ந்த சாதிக், பெங்க ளூரில் டெய்லராக பணிபுரிகிறார். அபுதாகிர் சென்னை பாடியைச் சேர்ந் தவர். இவர் ஏற்கெனவே இந்த வழக்கில் கைதான காஜா மொய்தீனு டன் சேர்ந்து கொலைக்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொலையாளிகள் 3 பேருக்கும் பல்வேறு நபர்கள் உதவி செய்துள் ளனர். அவர்களில் பலர் தலை மறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x