Published : 17 Nov 2018 08:17 AM
Last Updated : 17 Nov 2018 08:17 AM

புயலால் ரயில் சேவையில் கடும் பாதிப்பு

கஜா புயல் காரணமாக கும்ப கோணம், தஞ்சாவூர், மயிலாடு துறை, வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களில் ரயில்சேவையில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட சோழன் விரைவு ரயில், சிதம்பரம், கும்ப கோணம் வழியாக செல்லாமல் விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கப் பட்டது. இதேபோல், திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் பயணிகளின் நேற் றைய சேவையும் ரத்து செய்யப் பட்டது. ராமேஸ்வரம் - சென்னை (16852) விரைவு ரயில் நேற்று ராமநாதபுரத்தில் இருந்து இயக் கப்பட்டது. வாய்ப்புள்ள சில விரைவு ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம் வழியாக இயக்கப் படுகின்றன. சென்னை - மன்னார் குடி விரைவு ரயில் நேற்று ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

காரைக்கால், உழவன், வேளாங்கன்னி போன்ற விரைவு ரயில்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன. சேதமடைந் துள்ள தண்டவாளங்களை சீர மைக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்க ளில் முழுமையான ரயில்சேவை கிடைக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் திருப்பி அளிக்கப்படும்

தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘கஜா புயலால் கடந்த 2 நாளில் 25-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விரைவு ரயில்களின் பயணக் கட்டணம் முழுவதும் திரும்பி அளிக்கப்படும்.

ஐஆர்சிடிசி இணையத்தில் முன்பதிவு செய்துள்ள பயணி களுக்கு அவர்களது கணக்கில் பணம் திரும்பி விடும். முன்பதிவு மையங்களில் டிக்கெட் பெற்ற பயணிகள், அருகில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் காண்பித்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். கட்டணத் தொகையை பயணத் தேதியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x