Published : 17 Nov 2018 08:54 AM
Last Updated : 17 Nov 2018 08:54 AM

கணினி மென்பொருள் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

இந்தியாவில் கணினி மென் பொருள் துறையில் தமிழகம் முன் னணியில் இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதத் துடன் குறிப்பிட்டார்.

கணிதம் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது. லயோலா கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் கணிதமும், கணினி அறிவியலும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக இருந்து வருகின்றன. ஆர்யபட்டா, பிரம்மகுப்தா, பாஸ்கரா போன்ற இந்திய கணிதமேதைகள் கணிதத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளவிடற்கரியது. இவைதான் பிற்காலத்தில் கணிதத்தின் அசுர வளர்ச்சிக்கு அடிகோலியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாச ராமானுஜன், மனித கணினி என போற்றப்படும் சகுந்தலாதேவி, சிஆர். ராவ், சி.எஸ்.சேஷாத்ரி ஆகியோருக்கு நவீன கணித வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு.

இவ்வாறு இந்திய கணிதமேதை கள் எல்லா காலத்திலும் கணித, கணினி அறிவியல் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை செய் துள்ளனர். அதனால்தான் என்னவோ இன்றைய தினம் இந்தியா கணினி மென்பொருள் துறையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் தமிழகம் மென் பொருள் துறையில் முன்னணி யில் நிற்கிறது. அந்த வகையில், கணிதம் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான சர்வதேச கருத் தரங்கை சென்னையில் நடத்து வது பொருத்தமானதுதான். கணினி விஞ்ஞானிகளுக்கு இந்த கருத் தரங்கம் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். கணிதம், கணினி அறிவியல் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கின் தொடக்க விழா வில் லயோலா கல்லூரி அதிபர் அருட்தந்தை ஏ.எம்.ஜெயபதி பிரான் சிஸ், செயலர் அருட்தந்தை டி.செல்வநாயகம், லயோலா கணித, கணினி அறிவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் அருட்தந்தை ஆர்பர்ட் வில்லியம், டீன் எஸ்.வின்சென்ட், ரஷ்ய துணை தூதர் கென்னடி ரோகலேவ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x