Last Updated : 05 Nov, 2018 08:39 AM

 

Published : 05 Nov 2018 08:39 AM
Last Updated : 05 Nov 2018 08:39 AM

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிப்பு: சுகாதாரத் துறை நடவடிக்கை 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக இருந்த 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒருபுறம் டெங்கு காய்ச்சலும், மறுபுறம் பன்றிக் காய்ச்சலும் தீவிரமடைந்து வரு கின்றன. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காய்ச்சல்களின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. பன்றிக்காய்ச்சல் பாதிப்பை தடுக்க பொதுமக்களிடம் அடிக்கடி கைகளை கழுவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள், அங்கு டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியாகும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அப ராதம் விதிக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பலவேறு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவினாலே பன்றிக்காய்ச்சல் வராமல் தடுத்துவிடலாம். ஆனால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் டயர், சிமென்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்புகளில் தேங்கும் நல்ல நீரில் உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சலை பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கட்டுப் படுத்த முடியாது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

அதனால்தான் டெங்கு காய்ச் சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான பொருட் களை அகற்றி தூய்மையாக வைக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஆய்வின் போது அந்த பொருட்களை அகற்றா மல் ஏடிஸ் கொசுக்களின் உற் பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம். குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதிகபட்ச மாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 10 நாட் களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு ரூ.35 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் க.குழந்தை சாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x