Published : 20 Aug 2014 11:15 AM
Last Updated : 20 Aug 2014 11:15 AM

மேட்டூர் அணை நீர் இன்னும் கடைமடைக்கு செல்லாதது ஏன்?: கருணாநிதி கேள்வி

மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டு ஒரு வாரமாகியும், இன்னும் கடை மடை பகுதிகளுக்கு செல்லாதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை:

நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவி பெற்றி ருப்பது ஆட்சியில் பங்கு வகிப்பது போன்றதே என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் பேசியிருக்கிறாரே?

கடந்த காலத்தில் மத்திய அரசு ஏதாவது தவறு செய்தால், உடனே ஜெயலலிதா, திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு என்றுதான் கூறுவார். அதுபோல், அதிமுக அங்கம் வகிக்கும், இன்றைய மத்திய அரசு என்று நாமும் இனி கூறலாம் அல்லவா?

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரமாகியும், கடைமடைக்கு இன்னும் நீர் செல்லவில்லை யாமே?

அதைத்தான், நான் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே, வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டுமென்று தெரிவித்தேன். கடந்த ஆண்டு அதிமுக அரசு ஆகஸ்ட் 2ம் தேதி, பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்த போதிலும், விவசாயிகள் அந்தத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாதவாறு கால்வாய் கள் தூர் வாரப்படாமல், புதர் மண்டிக் கிடப்பதாகச் செய்திகள் வந்தது பற்றிக் குறிப்பிட்டிருந் தேன்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், பல இடங்களில் தூர் வாரும் பணிகள் இன்னும் முடிக் கப்படவில்லையாம். பெயருக்கு சில இடங்களில் தூர் வாரி விட்டு, உள் பகுதியில் தூர் வாரும் பணிகள் நடக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதனால்தான், மேட்டூர் அணை திறக்கப்பட்டபோதும், கடை மடைக்கு நீர் செல்லவில்லை என்று கூறுகிறார்கள். மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி, சம்பா ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் டெல்டா விவசா யிகளின் நிலை என்னவாகுமோ?

மாநிலங்களவையில் அதிமுக வுக்காக குரல் கொடுத்து வந்த மைத்ரேயனைத் தூக்கிப் போட்டு விட்டார்களே?

நவராத்திரி நேரத்தில் கொலு பொம்மைகளில் சிலவற்றை முதல் நாள் மேல் வரிசையில் வைத்திருப்பார்கள். அடுத்த நாள் சென்று பார்த்தால், சில கொலு பொம்மைகள் கீழ்த் தட்டுக்குப் போய்விடும். அதற்கடுத்த நாள், வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு விடும். இந்தக் கதைதான் அங்கே நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x