Published : 26 Nov 2018 09:16 AM
Last Updated : 26 Nov 2018 09:16 AM

மாற்றம் வந்தால்தான் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து 

சென்னை 

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக இளம்பெண்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:

மாம்பழம்தான் தமிழகத்தில் மாற்றத்தைக் கொடுக்கும். பெண் களை வாழ வைக்கும். தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் சமூக புரட்சி வரும். அப்போதுதான் எல்லோருக் கும் எல்லாமும் கிடைக்கும்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தேர்தலில் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றினர். டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். பாமக ஆட்சியில் பெண்களுக்கென தனி பட்ஜெட் போடப்படும். ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற வார்த்தை 10 வயது குழந்தைகளிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. பெரிய வர்களிடம் போய்ச் சேரவில்லை. அதை கொண்டு சேர்க்கும் பணி பாமக இளம்பெண்களிடம் உள்ளது.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

அன்புமணி பேசும்போது, ‘‘தமிழ கத்தில் அமைதியான மாற்றமாக பெண்கள் மனதில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பாமகவினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி யாற்ற வேண்டும். மதுவை ஒழித்தாலே பெண்களுக்கு பாதி விடுதலை கிடைத்துவிடும். பாமக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்திலேயே பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். இதனை பாமக இளம்பெண்கள் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x