Published : 21 Nov 2018 09:16 AM
Last Updated : 21 Nov 2018 09:16 AM

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆளுநர் பன்வாரிலால் இன்று நேரில் ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக நாகை, கட லூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள் ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பார்வையிடுகிறார். இதற்காக நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நாகை சென்றடைந் தார்.

இன்று காலை நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளை பார்வையிட்டு, புயல் சேத விவரங்களை ஆய்வு செய்கிறார். ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு இன்றிரவே சென்னை திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x