

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
புயலால் தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளன. இதற் காக அமைச்சர்கள், அரசுத் துறை களின் உயர் அலுவலர்கள் உள்ளிட் டோர் மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அமைச்சர்கள் செங் கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்பி ஆகியோரை நியமித்து முதல் வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.
நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவி களை அமைச்சர்கள் செங்கோட் டையன், உடுமலை ராதாகிருஷ் ணன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ ஆகியோர் வழங்கினர்.
இதையடுத்து அமைச்சர் செங் கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீட்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங் களை ஆய்வு செய்து, பாதிப்பு களை கணக்கெடுத்து அதன் அறிக்கையை புயல் சேத பகுதிகளை பார்வையிட வரும் முதல்வரிடம் அளிக்க உள்ளோம்.
அதி நவீன இயந்திரங்களின் உதவியுடன் மின் இணைப்புகளைச் சரிசெய்து வருகிறோம். சில பகுதிகளில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களுக்கு எரிபொருள் தேவை என்கின்றனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள் உடனடியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் செய்த செலவு தொகையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.