

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் சொந்த வீடு வாங்குவதற்கு ஏதுவாக ‘ரெப்கோ ரூரல்’ என்ற புதிய திட்டத்தை ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ரகு விடுத்துள்ள அறிக்கை:
இத்திட்டத்தின்கீழ் 9.60 சதவீத அளவில் குறைந்த வட்டியே வசூலிக்கப்படும். கிராமங்களி்ல் வசிக்கும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான நிலங்களை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் ரூ.2 லட்சத்துக்கு குறைவான வருவாய் உள்ளவர்களுக்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 50 ஆயிரம் பேருக்கு மிகாமல் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் இத்திட்டத் தின் கீழ் புதிய வீடுகள், நிலம் போன்றவை வாங்குவதற்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். கடனை 15 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.