Last Updated : 28 Nov, 2018 09:16 AM

 

Published : 28 Nov 2018 09:16 AM
Last Updated : 28 Nov 2018 09:16 AM

11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி: மற்றொரு சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு வழக்கு

பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வாரக் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த பர பரப்பு அடங்குவதற்குள், மற்றொரு 12 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 20 வாரம் கடந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த 40 வயது பெண்ணின் 11 வயது மகள், அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன் முறையுள்ள இளைஞர் ஒருவர், அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமியின் வயிற்றில் 24 வார கரு வளர்கிறது.

இதைக் கலைக்க மருத்துவக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி, சிறுமி யின் தாயார் உயர் நீதிமன்றக் கிளை யில் மனு தாக்கல் செய்தார்.

அதில், கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து 6 குழந்தைக ளைக் காப்பாற்றுகிறேன். எனது 11 வயது மகளை சகோதரியின் மகன் பலாத்காரம் செய்துள்ளார். இத னால் என் மகள் வயிற்றில் 24 வார கரு வளர்கிறது. 11 வயதில் குழந்தை பிறப்பு எனது மகளின் உடல், எதிர்காலத்தை சீரழித்து விடும். இதனால் கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும். ரூ. 4 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியை பரி சோதனை செய்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப் பதிலும், வளர விடுவதிலும் ஆபத்து உள்ளது. கருவைக் கலைப்பதாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலமே கலைக்க முடியும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, மற்றொரு மருத்து வக் குழு பரிசோதனைக்கு உத்தர விடப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில், கலைப்பதில் உள்ள ஆபத்தைவிட கருவை வளர்ப்பதில் அதிக ஆபத்து உள்ளது. கருவை வளர்த்தெடுப்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மகளின் வயிற்றில் வளரும்

கருவை கலைக்க தாய் ஒருவரே நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மருத்துவக் குழு அறிக்கை அடிப்படையில் பாதிக்கப் பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கும் முடிவை ஏற்கிறோம்.

சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்குழு தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரபணு சோதனைக்காக கலைக் கப்பட்ட கருவைப் பாதுகாக்க வேண் டும். கருக்கலைப்புக்கு பிறகு, சிறுமியின் உடல் நிலை தொடர்பாக டிச. 3-ம் தேதி மருத்துவக்குழு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மற்றொரு வழக்கு

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 70 வயது முதிய வர், எனது மகளை பலாத்காரம் செய்துள்ளார். இதில் என் மகள் கர்ப்பம் தரித்தார். அந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

குழந்தையைப் பெற்றெடுக்கும் உடல் நிலையில் என் மகள் இல்லை. தற்போது என் மகள் வயிற்றில் வளரும் கரு 20 வாரத்தை கடந்து விட்டது. அதை சட்டப்படிதான் கலைக்க முடியும். கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண் டும். எனக்கு இடைக்கால நிவாரண மாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதி ஜெகதீஷ்சந்திரா உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x