

மயிலாப்பூரில் முதியவரிடம் ரூ.40 ஆயிரம், மோதிரம் பறித்த 3 கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் அப்பு தெரு சாந்தி அடுக்குமாடி குடியி ருப்பில் வசிப்பவர் கல்யாண சுந்தரம் (74). இவர் நேற்று முன்தினம் வங்கிக்கு சென்று ரூ.40 ஆயிரம் பணம் எடுத்துவிட்டு, மயிலாப்பூர் நடுத்தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வங்கியில் இருந்தே பின்தொடர்ந்து வந்த 3 இளைஞர்கள், நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர், ‘‘உங்கள் கையில் உள்ள மோதி ரத்தை போலவே ஒரு மோதிரம் செய்ய வேண்டும், எங்களுடன் கடைக்கு வந்து இந்த மாடலை காண்பித்துவிட்டு செல்லுங்கள். நாங்களே உங்களை இரு சக்கர வாகனத்தில் வீடு வரை அழைத்துச் செல்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய கல்யாண சுந்தரம், அவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஒரு கடை அருகே வைத்து மோதிரத்தை கழட்டி வாங்கியுள்ளனர். மேலும், திருட்டு பயம் அதிகம் உள்ள இடம். பணத்தை பத்திரமாக பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறி, பணத்தை வாங்கியுள்ளனர். பின் னர் 3 பேரும் கல்யாணசுந்தரத்தை ஒரு வீட்டின் அருகே இறக்கிவிட்டு பணம், மோதிரத்துடன் தப்பிச் சென்றனர்.
கேமரா காட்சியால் சிக்கினர்
இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் வாகன எண்களை வைத்து 3 கொள் ளையர்களையும் மயிலாப்பூர் போலீஸார் நேற்று கைது செய் தனர். அவர்கள், திண்டிவனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (27), கண்ணகி நகரைச் சேர்ந்த முத்தையா (22), குமார் (20) என்பது தெரிந்தது. அவர்கள் வேறு ஏதேனும் கொள்ளையில் தொடர்பு உடையவர்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்