‘சுடிதாருக்கு மாறாதது ஆறுதல் அளிக்கிறது’: காங். உறுப்பினர் நகைச்சுவை

‘சுடிதாருக்கு மாறாதது ஆறுதல் அளிக்கிறது’: காங். உறுப்பினர் நகைச்சுவை
Updated on
1 min read

பெண் உறுப்பினர்கள், சுடிதார் போன்ற நவநாகரிக உடைக்கு மாறாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியபோது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

சட்டப்பேரவையில் அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜாண் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை பேசும்போது, “தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிவது தொடர்பாக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் பேரவைக்கு வரும் பெண் உறுப்பினர்கள், சுடிதார் போன்ற நவநாகரிக உடைக்கு மாறாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது” என்றார். அப்போது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

அமைச்சர் வளர்மதி எழுந்து, “அவைக்கு தினமும் வருகிறீர்கள். ஆனால், உங்கள் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒருவரை எப்படி பார்க்காமல் போனீர்கள்” என்றார்.

ஜாண் ஜேக்கப்பின் பின்னால் நியமன உறுப்பினர் நான்சி ஆன் சிந்தியா பிரான்ஸிஸ் அமர்ந்திருந்தார். அவர் எப்போதும் சுடிதார் அணிந்துதான் அவைக்கு வருகிறார் என்பதைத்தான் உறுப்பினருக்கு அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in