

சென்னை
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அடுத்த வாரம் ஆஜராக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் 14 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர் பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையம் அமைக் கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களிடம் விசாரணை
கடந்த சில வாரங்களாக, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷி யன்கள் 14 பேர், அடுத்த வாரம் ஆஜராகி சாட்சியம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, இதய மற்றும் நுரை யீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர் 26-ம் தேதியும், தொற்று நோய் சிறப்பு மருத்து வர் ராமகோபாலகிருஷ்ணன், நியூரோ டெக்னீஷியன் யுவ, தீவிர சிகிச்சைப் பிரிவு டெக்னீஷி யன்கள் அருண், பஞ்சாபிகேசன் ஆகியோர் 27-ம் தேதியும், மயக் கவியல் நிபுணர் எம்.போரா, ரேடியாலசிஸ்ட் சுதாகர், தீவிர சிகிச்சைப் பிரிவு டெக்னீஷியன் காமேஷ் ஆகியோர் 28-ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட் டுள்ளது.
மேலும், இதய மற்றும் நுரை யீரல் மாற்று சிகிச்சை மருத்து வர் மதன்குமார், சிடி ஸ்கேன் டெக்னீஷியன் காயத்ரி, பிசியோ தெரபிஸ்ட் ராஜேஸ்வரி ஆகியோர் 29-ம் தேதியும், ஜூனியர் கன்சல் டன்ட் (கார்டியாலஜி, எக்கோ) சாந்தி, தீவிர சிகிச்சைப் பிரிவு பதி வாளர் சஞ்சய், ஈஈஜி டெக்னீஷியன் புனிதா ஆகியோர் 30-ம் தேதியும் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.