

அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ணிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா ஜான் (48). எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்ணா நகரில் வசித்து வரும் கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் (47) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
‘நான் நினைத்தால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங் கித் தரமுடியும் என அஜந்தாவிடம் காமராஜ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி அஜந்தா ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி காமராஜ் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பணத்தை திருப்பித் தருமாறு அஜந்தா வற்புறுத்தி வந்தார். அதன்பேரில் காமராஜ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். 1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுக்கவில்லை. அதைக் கேட்டபோது காமராஜ் தன்னைத் திட்டி, தாக்குதல் நடத்தி யதாக மாம்பலம் காவல் நிலையத்தில் அஜந்தா புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து காமராஜை கைது செய்துள்ளனர். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக இளைஞர் அணிச் செயலாளராக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.