Published : 26 Aug 2014 09:43 AM
Last Updated : 26 Aug 2014 09:43 AM

தொழில்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 500 பேருக்கு ஓஎன்ஜிசி நிறுவன கல்வி உதவித்தொகை

தொழில்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 500 பேருக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மாதம் ரூ.4,000 கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது.

பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், எம்பிஏ, எம்எஸ்சி (ஜியாலஜி), எம்எஸ்சி (ஜியோ-பிசிக்ஸ்) படிப்புகள் படிக்கும் சிறந்த தாழ்த் தப்பட்ட, பழங்குடியின வகுப் பைச் சேர்ந்த மாணவர்கள் 500 பேருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகையை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) வழங்குகிறது.

பொறியியல் படிப்பில் 247 பேரும், மருத்துவப் படிப்பில் 45 பேரும், எம்பிஏ படிப்பில் 73 பேரும், எம்எஸ்சி படிப்புகளில் 135 பேரும் தேர்வுசெய்யப் படுவார்கள். பயனாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீத இடங் கள் மாணவிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவ-மாணவிகள் மெரிட் அடிப்படையில் தேர்வுசெய்யப் படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்களை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ongcindia.com) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை யும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x