Published : 18 Aug 2014 10:53 AM
Last Updated : 18 Aug 2014 10:53 AM

சுவாமிமலை கோயிலில் விமானக் கலசம் கீழே விழுந்ததால் பரபரப்பு

சுவாமிமலை முருகன் கோயிலில் மூலவர் விமானக் கலசம் சனிக் கிழமை இரவு கீழே விழுந்து சேத மடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகனின் ஆறுபடை வீடு களுள் 4-வது படைவீடாகவும், சிவபெருமானுக்கு முருகன் உபதேசம் செய்த தலமாகவும் கருதப்படும் சுவாமிமலை சுவாமி நாத சுவாமி கோயிலில் கடந்த 2000-ம் ஆண்டு நவ. 10-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

ஆகம விதிப்படி 12 ஆண்டு களுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதால், கோயில் விமான பாலாலயம் கடந்த 2012 அக். 29-ம் தேதி நடை பெற்றது. கோயில் விமானத் திருப்பணி ரூ.1 கோடியிலும், பிரகாரத் திருப்பணி ரூ.1 கோடியி லும் நடைபெற்று வருகிறது.

இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விமானத்தைச் சுற்றிலும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட உள்ளன. இதற்காக கோயில் மூலவர் விமானத்தைச் சுற்றிலும் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்த போது, சாரத்தின் மரம் ஒன்று விமானத்தின் உச்சியில் இருந்த கலசத்தின் மீது விழுந்தது. இதில், கலசம் கீழே விழுந்து சேதமடைந்தது.

மூன்று அடி உயரம் கொண்ட இந்தக் கலசம், தங்க முலாம் பூசப்பட்ட ஐம்பொன்னாலானது. கோயிலில் பாலாலயம் நடை பெற்று, தற்போது குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால், கலசம் கீழே விழுந்தற்கு பரிகார பூஜைகள் ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x