Published : 26 Oct 2018 09:47 AM
Last Updated : 26 Oct 2018 09:47 AM

3-வது நீதிபதி சத்தியநாராயணன் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர் பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், மூன்றாவது நீதிபதியாக எம்.சத்திய நாராயணனை பரிந்துரைத்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானியுடன் சேர்த்து பதவி மூப்பு வரிசையில் 7-வது நீதிபதி யாக உள்ளார் நீதிபதி எம்.சத்திய நாராயணன். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மீனாட்சிசுந்தரம் மாவட்ட நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1959-ல் பிறந்த சத்தியநாராய ணன், 1983-ல் சட்டக்கல்வியை முடித்து வழக்கறிஞராக பணி யைத் தொடங்கினார். நிர்வாக ரீதியிலான வழக்குகள், வரி, வரு வாய் வழக்குகளை திறமையாக கையாண்டவர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008-ல் கூடுதல் நீதிபதியாகவும், 2009-ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிக்கக் கோரும் வழக்கு, கிராமப்புற மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்குவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர்.

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட யாருமே ஊகிக்க முடியாத அளவுக்கு ரகசியமாக வைத்திருந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், 24-ம் தேதி நள்ளிரவில் வழக்கை திடீரென பட்டியலிட்டு, 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

தன்னிச்சையான தீர்ப்பு

அதிமுக, அமமுக, திமுகவின் மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நேற்று காலை 9.30 மணி முதல் காத்திருந்தனர். 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘‘இந்த வழக்கில் யாருடைய உத்தரவு சரி, தவறு என நான் தீர்ப்பு அளிக்கப்போவது இல்லை. எனது தன்னிச்சையான தீர்ப்பாக இதை பிறப்பிக்கிறேன்’’ என்று கூறி தீர்ப்பின் முக்கிய சாராம்சத்தை வாசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x