Published : 17 Oct 2018 12:08 PM
Last Updated : 17 Oct 2018 12:08 PM

தடையை விலக்கக் கோரி வேலைநிறுத்தம் தொடங்கினர்: தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தம்

குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கேன் வாட்டர் உற்பத்தியாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் வி.முரளி கூறியதாவது:

தமிழக அரசின் அரசாணை 142-ன்படி குளிர்பான நிறுவனங்கள் உள்ளிட்டவை குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மக்களுக்கு அத்தி யாவசியத் தேவை என்பதால், குடி நீருக்காக நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்யக் கூடாது’ என்று நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றோம். பின்னர், இந்த தடை ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனால், கேன் வாட்டர் பல நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது. குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கிறோம். வேறு நோக்கத்துக்காக தண்ணீர் எடுக்கவில்லை என்பதால், எங்களுக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி இன்றுமுதல் (அக்.16) கேன் குடிநீர் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்.

எங்கள் சங்கத்தில் 600 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் தண்ணீர் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். சென்னைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகிறோம். எங்களது வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். பொதுமக்கள் மட்டுமல் லாமல், எங்கள் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 50 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவர்.

உடனடி சட்டத்திருத்தம்

சென்னையில் மட்டும் தினமும் 5 லட்சத்து 40 ஆயிரம் வாட்டர் கேன்கள் விநியோகிக் கிறோம். 20 லிட்டர் கொண்ட ஒரு கேன் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. தமிழகத் தில் பெரும்பாலானோர் வாட்டர் கேனை நம்பியிருக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, குடிநீருக்கு தண்ணீர் எடுப்பதற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால், அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்களில் பல பேர் நிரந்தர மாக தொழிலை மூட நேரிடும். மேலும், குடிநீர் கேன் விலையும் ரூ.100 வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x