Published : 09 Oct 2018 07:52 AM
Last Updated : 09 Oct 2018 07:52 AM

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மத போதகரை கைது செய்ய சுதேசி பெண்கள் சங்கம் மனு: விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவு

இந்துக்களின் மத உணர்வை புண் படுத்தும் வகையிலும், மக்களி டையே பிரச்சினைகளை உருவாக் கும் வகையிலும் பேசிவரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி, சென்னை காவல் ஆணையரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்துள் ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம் நாலு மாவடி பகுதியை தலைமையிட மாகக் கொண்டு, கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மதப் பிரச்சாரம் செய்து வருகி றார். இவர் திருத்தணி முருகன் கோயில், விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் உட்பட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில் களை சாத்தான் வாழும் அரண்கள் என்றும், இந்து மதக் கடவுள்களை சாத்தான்கள் என்றும் கூறி, இந் துக்களின் மத உணர்வை புண் படுத்தும் வகையில் மதப் பிரச் சாரம் செய்து வருகிறார். 3-ம் பாலினத்தவரான திருநங்கைகள் மனம் புண்படும் வகையில் பேசி யுள்ளார்.

எனவே, மக்களிடையே மத மோதல்கள், இனக் கலவரங்கள் வெடிக்கும் முன்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக, போலியான மதப் பிரச்சாரம் செய்துவரும் மோகன் சி.லாசரஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அவர் சார்ந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x