

பொது இடத்தில் மது அருந்தியதை கண்டித்த உதவி ஆய்வாளரை அடித்து உதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் ராஜேந்திரன் (57). புதன்கிழமை இரவில் டவுட்டன் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது டவுட்டன் மேம்பாலத்துக்கு அடியில் அமர்ந்து 2 பேர் மது அருந்திக் கொண்டி ருந்தனர். அவர்களை லத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து செல்லு மாறு ராஜேந்திரன் விரட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து லத்தியை பிடுங்கி ராஜேந்திரனை தாக்கினர். இதில் அவரது கை, உடலில் பலத்த அடி விழுந்தது. ரோந்து வந்த மற்ற போலீஸார், அவர்களிடம் இருந்து ராஜேந்திரனை மீட்டு, இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் கைதான இருவரும் மூட்டை தூக்கும் தொழி லாளிகள் என்பதும், ஒருவர் பெரிய மேட்டைச் சேர்ந்த ரஞ்சித், இன் னொருவர் கீழ்ப்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பாலையன் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேப்பேரி காவலரை தாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.