Published : 05 Oct 2018 08:57 AM
Last Updated : 05 Oct 2018 08:57 AM

ஆலங்குடி, திட்டை கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று இரவு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பகவான் நேற்று இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைந்ததையொட்டி, குரு தலங்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, லட்சார்ச்சனை நடைபெற்றது.

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமென ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் முதலே தமிழகம் முழுவதுமிருந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று குருப் பெயர்ச்சி என்பதால் ஆபத்சகா யேஸ்வரர் கோயிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, குருபகவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு குருப்பெயர்ச்சி அடைந்த நேரமான இரவு 10.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

வசிஷ்டேஸ்வரர் கோயிலில்..

இதேபோல, தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நேற்று குருபகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 10.05 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட்டன. குருப்பெயர்ச் சியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x