Published : 23 Oct 2018 10:07 AM
Last Updated : 23 Oct 2018 10:07 AM

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இல்லை: உத்தரவை கடைபிடிக்காத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை

 

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

புத்தகச் சுமை மற்றும் மன உளைச்சலைக் குறைக்கும் வகை யில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தார்.

செய்தித்தாள்களில் விளம்பரம்

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக மீண்டும் வந்தது. அப்போது, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனைத்து மாநில செய்தித்தாள்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட் டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப் பில் ஆஜரான உதவி சொலி சிட்டர் ஜெனரல் ஜி.கார்த்தி கேயன், ‘‘இந்த உத்தரவை தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றி முறையாக அறி விப்பாணை வெளியிட்டுள்ளன.

மேலும் என்சிஇஆர்டி பரிந் துரை செய்யாத புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள வும், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

நாளை மீண்டும் விசாரணை

இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இரண்டாம் வகுப்பு வரை வீ்ட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவை சில மாநிலங்கள் மட்டுமே ஏற்று அறிவிப்பாணை வெளியிட்டுள் ளன. எனவே இந்த உத்தரவை பின்பற்றாமல் அலட்சியம் செய்யும் மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்து விசாரணையை நாளைக்கு (அக்.24) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x