Published : 19 Aug 2014 10:33 AM
Last Updated : 19 Aug 2014 10:33 AM

அடிப்படை வசதிகள் இல்லாத சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தம்: ‘உங்கள் குரல்’ பதிவில் பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என அப்பகுதி மக்கள், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுங்குவார் சத்திரம் பகுதி அமைந் துள்ளது. இதன் அருகே ஸ்ரீபெரும் புதூர் தொழிற்பேட்டை சிப்காட் அமைந்துள்ளது. பல்வேறு தொழிற் சாலைகள் சுங்குவார் சத்திரம் பகுதியிலேயே அமைந்துள்ளதால் தொழிலாளர்கள் பலர் சுங்கு வார் சத்திரத்தில் குடியேறி வருகின்றனர். அதனால், இங்கு நாளுக்கு நாள் மக்கள்தொகை அதி கரித்து வருகிறது.

இவற்றோடு சுற்றுவட்டார மக்களும் தங்களது அத்தியா வசியத் தேவைக்காக சுங்குவார் சத்திரத்துக்கு வருகின்றனர். மேலும், சென்னை, பெரும் புதூர், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தையே கிராம மக்கள் பிரதானமாக நம்பியுள்ளனர். அத னால், இங்கு தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பேருந்து நிறுத்தத்தில் அடிப்படை வசதிகளான பயணிகள் நிழற்குடை, பொதுக்கழிப்பிடம், குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கூறியதாவது: ‘பேருந்து நிறுத்தத்தில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாததால் பெண் பயணிகள் பெரும் அவதிப் படுகின்றனர். குடிநீர் வசதியும் இல்லாததால் முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி இப் பகுதி வியாபாரிகள் குடிநீரை அதிக விலைக்கு விற்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து, பேருந்து நிறுத்தம் பகுதிவாசிகள் கூறும் போது, ‘நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக மக்கள் நெடுஞ் சாலையில் நிற்கின்றனர். அதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், பெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ., சட்ட மன்ற தேர்தலின் போது தான் வெற்றி பெற்றால், சுங்குவார் சத்திரம் பகுதியில் கழிப்பறை, பயணிகள் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறினார். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, பெரும்புதூர் எம்.எல்.ஏ. பெருமாளிடம் கேட்ட போது, ‘சுங்குவார் சத்திரம் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டுவ தற்காக, தொகுதி நிதியில் இருந்து 2012-13ம் ஆண்டு ரூ.7.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து நிறுத்தம் அருகே, திருமங்கலம் ஊராட்சிக்கு சொந்த மான இடத்தில் கழிப்பிடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், திருமங்கலம் ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

மேலும், பயணிகள் நிழற்குடை அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் மற்றும் போதுமான இடவசதி இல் லாததால், நிழற்குடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால் வாய்கள் அமைத்து பின்னர் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் சாலையில் நிற்கும் பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x