Published : 12 Oct 2018 08:23 AM
Last Updated : 12 Oct 2018 08:23 AM

தஞ்சை பெரிய கோயில், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தொல்லியல் துறையினர் 5 மணி நேரம் சோதனை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் நேற்று 5 மணி நேரம் ஆய்வு செய்தனர்.

உலகப் புகழ் பெற்றதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுமான தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பழமையான ஐம்பொன் சிலைக ளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கடந்த சில மாதங்களாக கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன் மற்றும் பட்டத்தரசி உலகமாதேவி சிலைகள் குஜராத் கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்டு அண்மையில் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளன.

கடந்த செப்.29-ம் தேதி, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையி லான குழுவினர் பெரிய கோயில் சிலைகளை மீண்டும் ஆய்வு செய்த னர். அப்போது, சில சிலைகளில் தற்கால தமிழ் எழுத்துகளில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்திய தொல்லி யல் துறை தென் மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 15 பேர் கொண்ட வல்லுநர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 41 சிலைகளின் உண்மைத்தன்மை (பழமை குறித்து) 2-ம் கட்டமாக நேற்று ஆய்வு செய்தனர். அப் போது, கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் போன்ற பழங்கால ஆவணங்களில் உள்ள படி சிலைகளின் அமைப்பு, உயரம், எடை ஆகியவை உள்ளனவா என் பது குறித்து இந்திய தொல்லியல் துறையினர் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து, சரிபார்த்தனர்.

இந்த ஆய்வு 5 மணி நேரத்துக் கும் மேலாக நடைபெற்றது. அப்போது, கோயில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை செய்தனர். தொடர்ந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள 19 சிலைகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.

பசுபதீஸ்வரர் கோயிலில் ஆய்வு

கும்பகோணம் பகுதியில் உள்ள 73 கிராமக் கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 15 பேரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 50-க் கும் மேற்பட்ட போலீஸாரும் பந்தநல்லூர் கோயிலில் உள்ள சிலைகளின் உயரம், சிலைகள் எந்த உலோகத்தால் ஆனவை, எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x