திருவாரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

திருவாரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Updated on
1 min read

திருவாரூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே கேக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தென்கோவன் (24). இவர் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஞாயிற்றுக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது குழந்தையைக் காணவில்லை என பெற்றோர்கள் தேடினர்.

அப்போது, வீட்டு மாடியில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அச்சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது சிறுமியிடம் தென்கோவன் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்ததை அறிந்த தென்கோவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறுமியை திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு சிறுமி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் தென்கோவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மாலையே திருவாரூர் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட தென்கோவனை நீதிபதி, சிறையிலடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in