Published : 11 Oct 2018 08:25 AM
Last Updated : 11 Oct 2018 08:25 AM

தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தொடக்கம்: நெல்லை ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் மகாபரணி ஆரத்தி பூஜை

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா இன்று தொடங்குகிறது. பாபநாசம், திருப்புடைமருதூர் மற்றும் அருகன் குளத்தில் நடைபெறும் விழாக் களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறார். அருகன்குளம் ஜடாயு தீர்த்தக் கட்டத்தில் மகாபரணி ஆரத்தி பூஜை இன்று நடைபெறுகிறது.

144 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெறும் தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா இன்று தொடங்குகிறது. பாபநாசத்தில் இன்று காலையில் புஷ்கரம் விழாவையும், அங்கு நடைபெறும் அகில பாரத துறவி யர் சங்க மாநாட்டையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். பின்னர், திருநெல்வேலி அருகே அருகன் குளம் ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடை பெறும் மகாபரணி ஆரத்தி நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கி றார். இதற்காக காசியில் இருந்து 7 வேதபண்டிதர்கள் வந்துள்ளனர். 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. படித்துறையில் 7 சிறப்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள எட்டெழுத்து பெரு மாள் கோயில் கோசாலை முன்பகுதியில் 54 யாககுண்டங் களுடன் யாகசாலை அமைக்கப் பட்டுள்ளது. அங்கு நேற்று கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இன்றுமுதல் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சி சங்கர மடம்

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் திருப்புடைமருதுாரில் தாமிரபரணி மகா புஷ்கரம் பெருவிழா நடத்தப் படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விழாவை தொடங்கி வைக்கிறார். வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தினமும் புனித நீராடல், ஹோமங் கள், வேள்விகள், தர்ப்பணம், அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. காஞ்சி பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமி கள் மற்றும் ஆதின கர்த்தர்கள், வைணவ ஜீயர்கள் பங்கேற்கிறார் கள்.

ஆதீன கர்த்தர்கள்

குறுக்குத்துறை தீர்த்தக் கட்டம் மற்றும் வல்லநாடு அகரம் தசாவதார தீர்த்தக் கட்டம் ஆகிய இடங்களில் ஹோமங்கள், வேதபாராயணங்கள் 12 நாட்களும் நடைபெறவுள்ளன. அகரம் தசாவதார தீர்த்தத்தில் நடைபெறவுள்ள விழாவில் தருமபுரம் ஆதீனம் இளைய தம்பிரான் சுவாமிகள், திருவா வடுதுறை ஆதீனம் கலந்து கொள்கின்றனர். திருநெல்வேலி சங்கீத சபாவில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில், இன்றுமுதல் 22-ம் தேதி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக கணபதி ஹோமம் அங்கு நடைபெற்றது.

கவிதை வேள்வி

`தாமிரபரணியைப் போற்று வோம்’ என்ற தலைப்பில், சென்னை `கவிதை உறவு’ அமைப்பின் நிறுவனர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 100 கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவிதை வேள்வி திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, 16 வரிகளில், மரபு கவிதை அல்லது புதுக்கவிதை எழுதி, தமது சொந்த படைப்பு என்ற உறுதிமொழி சான்றுடன், சுயமுகவரியோடு வரும் 13-ம் தேதிக்குள், `ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர் நகர் 627 357’ என்ற முகவரிக்கு அல்லது jayendragolden@yahoo.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் 100 கவிதைகள் புத்தகமாக வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x