Published : 08 Oct 2018 08:13 AM
Last Updated : 08 Oct 2018 08:13 AM

கொள்ளையடிக்கப் போவதாக மிரட்டல் வந்ததால் ‘சிலைகளை பாதுகாக்க மண்ணில் புதைத்து வைத்தேன்’: பெண் தொழிலதிபர் கிரண் ராவ் தகவல்

சிலைகளை கொள்ளையடிக்கப் போவதாக மிரட்டியதால்தான் மண்ணில் புதைத்து வைத்தேன் என்று மண்ணில் புதைத்து வைத்து செயற்கை புல் போட்டு மூடி மறைத்த 23 சிலைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பெண் தொழில் அதிபர் கிரண் ராவ் தெரிவித்து உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ரன் வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 267 சிலைகளை கைப்பற்றியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் கிரண்ராவுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலைகளை, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கிரண் ராவ் கூறும் போது, “சில தினங்களுக்கு முன்பு, எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ஒரு மணி நேரத்தில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் நான் சேகரித்து வைத்துள்ள சில சிலைகளையும் கொடுக்க வேண்டும் என்றும் தவறினால், என்னையும் எனது குடும்பத்தினரையும் மிகவும் கொடூரமாக தாக்குவதாகவும் மேலும் எனது குடும்பத்துக்கு அவப்பெயர் வரும் விதமாக செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் வந்தது. தர மறுத்தால் அவரது ஆள்பலம் கொண்டு விரும்பிய சிலைகளை எடுத்துச் சென்று விடுவதாக மிரட்டினார். நான் இந்த சிலைகளை கடந்த முப்பது வருடங்களாக உணர்வு பூர்வமாக மதித்து பாதுகாத்து வந்துள்ளேன். இந்த மிரட்டல் குறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மிரட்டல் என்னை மிகவும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. என் குடும்பத்தினர் மற்றும் கவுரவம் குறித்து வேதனை கொண்டேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கெடுதல் வந்து விடக்கூடாது, அதேநேரம் சிலைகளையும் பத்திரப்படுத்த எண்ணினேன். இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் வெளியில் அழகுக்காக வைக்கப்பட்டு இருந்த சில சிலைகளை மண்ணில் புதைத்து வைத்தேன்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் சிலைகளின் விபரங்களை பட்டியலிட்டு, அவை களுக்கான என்னிடமுள்ள ஆவ ணங்களுடன் சமர்ப்பிக்க உள்ளேன். அனைத்து பொருட்களும் சட்டப்படி முறையாக அவற்றுக்கான விலை கொடுத்து வாங்கப்பட்டவை. நான் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்யவில்லை. நான் இந்திய கலை, கலாச்சாரம், தொன்மைக்கு மதிப்பு கொடுப்பவர். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

லுக்அவுட் நோட்டீஸ்

இதனிடையே, சிலைக்கடத்தல் விவகாரத்தில் கிரண் ராவ் வெளி நாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.நான் இந்த சிலைகளை கடந்த முப்பது வருடங்களாக உணர்வு பூர்வமாக மதித்து பாதுகாத்து வந்துள்ளேன். இந்த மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x