Published : 04 Oct 2018 10:53 AM
Last Updated : 04 Oct 2018 10:53 AM

ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கில் அரசு தரப்பு சாட்சி பல்டி 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சி, பிறழ் சாட்சியாக மாறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு சென் னையில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதன் காரணமாகவே வெள்ளத்தில் பலர் சிக்கியதாகவும், சென்னை யில் மழை வெள்ள பாதிப்பு கடு மையாக இருக்கும் என மத்திய புவியியல் துறை முன்கூட்டியே எச்சரித்தபோதும், தமிழக அரசின் மெத்தனப்போக்காலேயே பேரி ழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் மீது தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

உரிய நடவடிக்கை

அப்போது இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியான வழக்கறிஞர் பரணிகுமார் என்பவர், ‘‘சென்னையை பலத்த மழை தாக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது உண்மைதான்.

ஆனால், இந்த எச்சரிக் கையை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக் காமல் மறைத்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு தெரிந்திருந் தால் இத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்.

செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதற்கு அமைச்சர் உதயகுமார்தான் காரணம்’’ என திடீரென பிறழ்சாட்சியம் அளித்தார்.

இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x