Published : 25 Oct 2018 08:54 AM
Last Updated : 25 Oct 2018 08:54 AM

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக அரசு கவிழாது: துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக அரசு கவிழாது என்று துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 3 ஆயிரம் பெண் கள் பங்கேற்கும் அதிமுக சைக்கிள் பேரணி நேற்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. வேலம் மாள் மருத்துவக்கல்லூரி அருகே நடந்த இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பா ளர் வைத்தியலிங்கம் எம்பி மற்றும் 15 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக் கள் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிரிகள் காணும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. இங்குள்ள பெண்கள் விடும் மூச்சுக் காற்றில் எதிரிகள் காணாமல் போய் விடுவார்கள். ஆட்சியும், கட்சியும் தங்களிடம் சேர வேண்டும் என்ற கெட்ட எண்ணம், தற்போதுள்ள துரோகிகளுக்கு வந்துள்ளது.

அமைச்சர் ஆர்பி.உதய குமார் எதையும் விஞ்ஞானப் பூர் வமாகச் சிந்தித்து பல்வேறு திட்டங் களை உருவாக்கி உள்ளார். கட்சித் தொண்டர்களை சோர்வடையவிடா மல், எதிரிகளால் கட்சிக்கு எந்த சூழலிலும் ஆபத்து வந்துவிடாமல் காப்பதில் தனது கடமையை சரியா கச் செய்து வருகிறார். மற்ற நிர்வாகிகளுக்கு உதயகுமார் எப் போதுமே முன்னுதாரணமாக திகழ் பவர். இந்தப் பேரணியை அவரைத் தவிர யாராலும் இவ்வளவு சிறப் பாக ஏற்பாடு செய்திருக்க முடி யாது. அவரைப் போல ஒவ்வொரு வரும் கட்சிக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x