Last Updated : 24 Oct, 2018 10:42 AM

 

Published : 24 Oct 2018 10:42 AM
Last Updated : 24 Oct 2018 10:42 AM

லட்சக்கணக்கானோர் சங்கமித்த மகா புஷ்கரம்: ஜாதி, மதங்களை கடந்து தாமிரபரணி நதியின் மீதான பற்றை வெளிக்காட்டிய விழா

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 13 நாட்க ளாக நடத்தப்பட்ட தாமிரபரணி மகா புஷ்கரம் விழா ஜாதி, மதம், இனங்களை கடந்து லட்சக்கணக் கானோரை சங்கமிக்க வைத்து, ஒருமைப்பாட்டை உணர்த்தியிருக் கிறது. நதியின் மீதான மக்களுக் குள்ள நெருக்கத்தை வெளிக் காட்டியிருக்கிறது.

கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்ற இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந் தும், நாட்டின் பல்வேறு இடங் களில் இருந்தும் முக்கிய பிரமுகர் கள், சாமானிய மக்கள் என்று அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமின்றி புனித நீராடினர்.

144 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவே யில்லை, அந்த காலக்கட்டத்தில் இப்பகுதியில் ஆறு வறண்டு பஞ்சம் நிலவியது என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இந்து சமயம் சார்ந்துதான் இந்த விழா நடத்தப்படுவதாக தொடக்கத்தில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், இஸ்லாமியர்களும், கிறிஸ் தவர்களும் இந்த விழாவில் பங் கேற்று சிறப்பு செய்தனர்.

மழை அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித் திருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழாமல் இயற்கையும் இந்த விழாவுக்கு ஒத்துழைத்தது. வெளிநாடுகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச் சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் லட்சக்கணக்கில் மக்கள் இங்கு வந்து சென்றனர். திருநெல்வேலியில் அல்வா கடை களில் கடந்த 13 நாட்களிலும் வியா பாரம் களைகட்டியது. ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலை மோதியது.

ஆற்றுக்குள் குளித்தவர்கள் பெரும்பாலானோர் எண்ணெய் தேய்த்தோ, சோப்பு, ஷாம்புவை பயன்படுத்தியோ குளிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்தவில்லை. ஆற்றை மாசுபடுத் தாமல் குளிக்க வேண்டும் என்ற அக்கறை தெரிந்தது.

வாய்ப்பை நழுவவிட்ட அரசு

புஷ்கரம் விழாவை அரசு விழா வாக அறிவித்து நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது பலரது கருத்து. இந்த விழாவை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியை ஒதுக்கி தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க லாம். படித்துறைகளையும், சிதில மடையும் பழங்கால மண்டபங்களை யும் புதுப்பித்திருக்கலாம். ஆற்றுக் குள் கழிவுகள் திறந்துவிடுவதை தடுத்திருக்கலாம்.

கோதாவரி புஷ்கரம் விழாவின் போது ஆந்திர மாநில அரசு கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கி பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியது. அதுபோல் தாமிரபரணியை உயிர்ப்பிக்கும் வகையிலான திட்டங்களை செயல் படுத்தியிருக்க வேண்டும். இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டிருக்கிறது. விழாவுக்கு வந்த லட்சக்கணக் கான மக்களுக்கு இன்னும் அதிகள வில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

ஒவ்வொரு தீர்த்தக்கட்டத்திலும் பணியாற்றிய காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக சேவை புரிந்தனர். அறநிலையத் துறையின் கெடுபிடியால் முக்கிய கோயில் களில் இருந்து சுவாமிகள் தீர்த்த வாரிக்கு எழுந்தருளவில்லை.

கிராமங்களில் ஆர்வம்

தாமிரபரணி தொடர்பான 5 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக் கின்றன. அகில பாரத துறவியர்கள் சங்கம், சித்தர்கள் கோட்டம், காஞ்சி சங்கர மடம், சிருங்கேரி மடம், அருகன்குளம் எட்டெழுத்து பெரு மாள் கோசாலை நிர்வாகம் உள் ளிட்ட முக்கிய அமைப்புகள், நிறு வனங்கள் விழாவை முன்னெடுத்து நடத்தின. ஆற்றங்கரையோர கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து விழாவை கொண்டாடினர். சொந்த காசில் தினமும் அன்னதானமும் வழங்கினர். தாமிரபரணி மீதான அவர்களது பற்றை இது வெளிப் படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x