Last Updated : 08 Oct, 2018 09:20 AM

 

Published : 08 Oct 2018 09:20 AM
Last Updated : 08 Oct 2018 09:20 AM

காஞ்சிபுரம் நகரில் பூம்புகார் அங்காடி: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், பாரம்பரிய கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பூம்புகார் நிறுவனத்தின் விற் பனை அங்காடியை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்திறன் தொழில் கள் வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் பூம்புகார் நிறுவனம், பாரம்பரிய வேலைப்பாடுகள் நிறைந்த கைவினை சிற்பங்கள், பொருட்களை தயாரித்து விற் பனை செய்து வருகிறது. இத னால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூம்புகார் நிறுவனத்தில் கைவினை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பகுதியில் பூம்புகார் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பண்டிகை நாட்களில் தள்ளுபடி உட்பட பல் வேறு சலுகை விலையில் கை வினை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அனைவரும் பெரிதும் பயனடைகின்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் தலைநகரும் மற்றும் கோயில் நகரமுமான காஞ்சிபுரம் பகுதி யில் உள்ள வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், கயிலாசநாதர் உட்பட பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிக சுற் றுலா வரும் பயணிகள், கைத்திற னால் தயாரிக்கப்பட்ட சுவாமி சிற்பங்கள் மற்றும் கொலு பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதை பயன் படுத்தி, தனியார் நிறுவனங்கள் கைவினைப் பொருட்கள் அங்காடிகளை திறந்துள்ளன. இவற்றில் விலை அதிகமாகவும் தரமில்லாமலும் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கையால் தயாரிக்கப் படாத பொருட்களையும் கை வினைப் பொருட்கள் எனக் கூறி விற்கும் நிலையும் உள்ளது. எனவே, பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் அங் காடியை காஞ்சி நகரில் அமைக்க வேண்டும் என சுற் றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, உள்ளூரை சேர்ந்த ஞானமூர்த்தி கூறும் போது, "காஞ்சிபுரம் நகருக்கு வந்து சென்றதன் நினைவாக கையால் தயாரிக்கப்பட்ட சுவாமி சிலைகள், மரங்களில் தயாரித்த பாரம்பரிய பொம்மைகள், கொலு பொம்மைகளை வாங்க விரும்புபவர்களுக்கு தரமாகவும் குறைந்த விலையிலும் பொருட் கள் கிடைப்பதில்லை. மேலும், கைவினை பொருட்கள் எனக்கூறி போலிகளை விற்பனை செய்யும் கடைகளும் அதிகரித்து வருகின் றன. அதனால், பாரம்பரிய கை வினை பொருட்களை குறைந்த விலையில் விற்கும் பூம்புகார் நிறுவனத்தின் அங்காடியை காஞ்சி நகரில் திறக்க நடவடிக்கை வேண்டும்" என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச் சிக் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "காஞ்சியில் பூம்புகாரின் கைவினை பொருட் கள் விற்பனை அங்காடி அமைக்க, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், வாடகை கட்டிடத்தில் கடை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்" என்றார்.கைவினை பொருட்கள் எனக்கூறி போலிகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x