Published : 20 Oct 2018 11:09 AM
Last Updated : 20 Oct 2018 11:09 AM

சட்டம் ஒழுங்கு நிலை காவல் ஆணையர் ஆலோசனை

சென்னையில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் போலீஸ் உயர் அதிகாரி களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் குற்றங் களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர காவல் ஆணையர் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரு கிறார்.

அதன்படி, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது தளத்தில் நேற்று ஆலோ சனை கூட்டம் நடத்தினார். இதில் கூடுதல் காவல் ஆணை யர்கள் மகேஷ்குமார் அகர்வால் (சென்னை தெற்கு), ஆர்.தினகரன் (சென்னை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் சென்னை மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு மண்டல இணை ஆணையர்கள், 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் பங்கேற்றனர். நுண்ணறிவு துணை ஆணை யர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் கேரளாவில் தற் போது நடைபெற்று வரும் சபரி மலை விவகாரம் குறித்தும், இதன் தொடர்ச்சியாக சென்னையில் செய்ய வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோ சிக்கப்பட்டதாக கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x