இனி பார்வையற்றோரும் கேரம் விளையாடலாம்: மனோரீதியான புதிய கேரம் போர்டு கண்டுபிடிப்பு

இனி பார்வையற்றோரும் கேரம் விளையாடலாம்: மனோரீதியான புதிய கேரம் போர்டு கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பார்வையற்றோர் விளையாடுவதற் கான மனோரீதியான புதிய கேரம் போர்டை ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் மிலன்தாஸ் கண்டுபிடித்துள்ளார்.

சராசரி மனிதர்களுக்காக புதுப்புது பொழுதுபோக்கு விளை யாட்டுகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. ஆனால், இருண்ட உலகத்தில் நிரந்தரமாக வாழும் பார்வையற்றோருக்கான பொழுது போக்கு குறித்து யாரும் சிந்திப் பது இல்லை. இதனால் பார்வை யற்றோர், மாற்றுத் திறனாளிகளுக் கான பொழுதுபோக்குகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில், பார்வையற்றோரை மனதில் கொண்டு அவர்கள் விளை யாடுவதற்காக ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் மிலன்தாஸ், மனோவியல் ரீதியான புதிய கேரம் போர்டை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பார்வையற்றவர்கள் எப்போதும் மூக்கில் விரலை வைத் துக் கொண்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டும், கையை ஆட்டிக் கொண்டும் இருக்கும் பழக்க முடையவர்கள். தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேரம் போர்டில் விளையாடும்போது அவர்களது அறிவுக்கூர்மை, உடல் திறன்கள் மேம்பாடு அடையும்.

வழக்கமானதைவிட வித்தி யாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரம் போர்டில் ஒரு பக்கம் 10 குழிகளும், எதிர்ப் பக்கம் 10 குழிகளும், இரண்டுக்கும் நடுவில் ஒரு குழியும் இருக்கும். வெள்ளை காயின்கள் வழுவழுப்பாகவும், கருப்பு காயின்கள் நடுவில் மேடாக வும், சிகப்புக் காயின் இருபக்க மும் மேடாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் பார்வையற்றவர்கள் எந்த நிற காயின் என்பதை தடவிப்பார்த்து உணர்ந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பள்ளத்தைச் சுற்றிலும் நான்கு சிறு துளைகள் போடப்பட்டுள்ளன. எதிராளி எந்தக் குழியில் காயினை போட வேண்டும் என்று கூறியதும், அந்த இடத்தை தடவிப் பார்த்து இடத்தை உணர்ந்து கொள்ள முடியும். பின்பு, ஸ்டிரைக்கரை காயினுடன் ஒட்டிவைத்து குழியை நோக்கி சுண்டி விட வேண்டும்.

இந்த கேரம் போர்டில் காயின்கள் குழிக்கு வெளியே செல்லாதவாறு தடுப்புக் கட்டை அமைக்கப்பட்டுள்ளதால், சரியாக குழிக்குள் விழும். இதற்காக குண்டு உள்ளிட்ட 3 சிறு இணைப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொரு காயினுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து வெற்றியை நிர்ணயிக்கலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in