Published : 26 Oct 2018 02:03 PM
Last Updated : 26 Oct 2018 02:03 PM

பாலியல் குற்ற வழக்கில் பெண்காவலரை கைது செய்ய முயன்ற 2 எஸ்ஐகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் தீர்ப்பு

பாலியல் குற்ற வழக்கில் ஆயுதப்படை பெண் காவலரை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் சத்யா, கடந்த 2013-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 2013-ல் சத்யாவின் வீட்டிற்கு வந்த சுத்தமல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியன் மற்றும் ஜோசப் மேரி ஆகியோர், சத்யாவையும் அவரது குடும்பத்தினரையும் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட போவதாக மிரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், காவலர்கள் சத்யாவின் அம்மாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் காவலர் சத்யா மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கில் விசாரணை நடத்திய ஆணையத்தின் உறுப்பினர் ஜெயச்சந்திரன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியன், ஜோசப் மேரி இருவருக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதை 4 வாரத்தில் மனுதாரருக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x