Published : 24 Oct 2018 10:30 AM
Last Updated : 24 Oct 2018 10:30 AM

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர், சிஇஓ-வாக கே.என்.ராதாகிருஷ்ணன் நியமனம்

கே.என்.ராதாகிருஷ்ணன்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கே.என்.ராதாகிருஷ்ணன் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்.

சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளராக 1986-ம் ஆண்டு தனது பணியை தொடங்கிய கே.என்.ராதாகிருஷ்ணன், பின்னர் வணிக திட்டமிடல் மற்றும் ஒட்டுமொத்த தர மேலாண்மைத் துறையின் தலைவராக உயர்ந்தார். 2004-ம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவராகவும், 2008-ம் ஆண்டு தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவரது தலைமையில்தான், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் நாட்டிலேயே 3-வது பெரிய நிறுவனம் என்ற இடத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிடித்தது.

உலக அளவில் 60 சந்தைகளில் டிவிஎஸ் நிறுவனம் பரந்து விரிந் திருப்பதற்கு வழிவகுத்தவர் கே.என்.ராதாகிருஷ்ணன். தரம், வாடிக்கையாளர் விருப்பம், தொழில் நுட்பம், சிறந்த திட்டமிடல் போன்ற வற்றில் அவர் அதிக கவனமும், ஆர்வமும் செலுத்துபவர்.

கே.என்.ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறு வனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கூறும்போது, “இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக் கப்பட்டிருப்பதில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெருமை கொள்கிறது.

வாகனத் துறையில் அவரது அனுபவம் டிவிஎஸ் நிறுவனம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. வருங்காலத்திலும் நிறுவனத்தை இன்னும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x