Last Updated : 28 Oct, 2018 05:51 PM

 

Published : 28 Oct 2018 05:51 PM
Last Updated : 28 Oct 2018 05:51 PM

உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார்? - நீங்கள் தயாரா?; நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால்

தீபாவளி வரும் சூழலில் புதுச்சேரி மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் சூழலில் அதிகாரம் தொடர்பான மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார்- முதல்வர் தயாரா என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சூழலில் மக்கள் நலத்திட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷனில் அரிசி விநியோகம் செய்யப்படாத சூழலில் தீபாவளியையொட்டி பல நலத்திட்ட உதவிகளும் செயல்பாட்டில் இல்லை.

நிலுவை ஊதியம் கோரி பலத்தரப்பிலும் போராட்டங்கள் புதுச்சேரியெங்கும் வலுத்துள்ளன.

அரசு சார்பு நிறுவனத்தில் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு ஐந்து மாத நிலுவை ஊதியம் தரக்கோரி ரூ. 7.5 கோடிக்கு கோப்புகள் ஒப்புதலுக்காக கிரண்பேடிக்கு அனுப்பி அவர் நிராகரித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்ட தகவல் விவரம்:

குடிமை பொருள் வழங்கல் துறையிலிருந்து பாப்ஸ்கோவுக்கு ரூ. 7.5 கோடி அனுப்ப பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.

இலவச அரிசி திட்டத்திலிருந்து நிதியை பாப்ஸ்கோவுக்கு மாற்றுவது சரியானதல்ல.

முதல்வர் தொடர்ந்து என் மீது பொய்களும், புகார்களும் தெரிவிப்பது தொடர்கிறது. அது எனது கவனத்துக்கும் வருகிறது.

இவ்விஷயத்தில் இருவரும் (முதல்வர், ஆளுநர்) உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கு நான் தயார்- முதல்வர் தயாரா என்று கேள்வி எழுப்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x