Published : 16 Oct 2018 02:27 PM
Last Updated : 16 Oct 2018 02:27 PM

கருத்துரிமை போற்றதும் - கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

’கருத்துரிமை போற்றதும்’ என்கிற தலைப்பில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரும் வெள்ளிக்கிழமை நிகழ்வு ஒன்றை நடத்த இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,”இந்திய அரசியல் சாசனம் குடிமக்களாகிய நமக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மிக அடிப்படையான உரிமைகளில் ஒன்றாக வழங்கி இருக்கிறது.

தொண்மையான மொழிகளையும் பண்பாட்டு வளமைகளையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ள நம் மக்கள் தங்கள் கலை இலக்கிய அறிவியல் ஆக்கங்களை எவ்வித அச்சமும் தடையுமின்றி வெளிப்படுத்துவதற்கு இந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமே அடிப்படையாக இயங்குகிறது.

இந்த கருத்து சுதந்திரம்தான் சமூகத்தின் சாட்சியாகவும் விளங்குகிறது. சமூகத்தின் மனசாட்சியாக இயங்குவதற்கு எழுதுவதற்குமான உள்ளாற்றலை கலை இலக்கியவாதிகளுக்கு ஊடகவியலாளர்களுக்கும் வழங்குகிறது.

எல்லாவித கருத்தோட்டங்களுக்கும் மதிப்பளிக்கவும் மாற்றுக்கருத்துகளுக்கும் செவிமடுக்கவும் தேவையான புரிதலை சமூகத்தில் பரவலாக்கும் முயற்சியாக ’கருத்துரிமை போற்றதும்’ என்கிற முழு நாள் நிகழ்வு சென்னை காமராசர் அரங்கில் அக்டோபர் 18 ஆம் தேதி எங்கள் அமைப்பு நடந்துள்ளது.

இதில் மாநிலம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்காண எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கலைஞர்கள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பத்திரிகையாளர் அ. குமரேசன்,  நாடக ஆசிரியர் பிரளயன்,ரோகிணி  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x