Published : 27 Oct 2018 08:41 AM
Last Updated : 27 Oct 2018 08:41 AM

தங்கள் நிலத்தின் பயிர் விவரங்களை விவசாயிகளே பதிவு செய்ய இ-அடங்கல், டிஎன்- ஸ்மார்ட் அறிமுகம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வருவாய்த் துறை சார்பில், விவசாயிகளுக்கு உதவும் ‘இ அடங்கல்’ திட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான டிஎன்-ஸ்மார்ட் இணையதளம், கைபேசி செயலி பயன்பாட்டை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் பருவ வாரியாக சாகுபடி செய்யும் பயிர்கள், அதன் விளைச்சல், நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற பல விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள்  கைப்பட எழுதி பராமரிக்கப்படும் நில பதிவேடு ‘அடங்கல்’ ஆகும். அவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்களை ஒருங்கிணைத்து "ஜி" அறிக்கை தயாரிக்கப்படுகிறது.  மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம

அளவிலான உணவு உற்பத்தியை  கணக்கிடுவதில் இப்பதிவேடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு கிராம நிர்வாக அலுவலர் களால் கைப்பட எழுதப்பட்டு வரும் அடங்கல் பதிவேட்டை  மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் வகையில், இ-அடங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வருவாய்த் துறை சார்பில், ரூ.1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் தாய்லாந்தில் உள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு (ஆர்ஐஎம்இஎஸ்) மையத்துடன் இணைந்து பல்

வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்புநடவடிக்கைகளை முறைப்படுத் தும் இணையதள புவியியல் தகவல் முறை (ஜிஐஎஸ்) அமைப்பான  டிஎன்-ஸ்மார்ட் உருவாக்கப் பட்டுள்ளது.  தமிழக முதல்வர் கே.பழனிசாமி இ-அடங்கல் மற்றும் டிஎன்-ஸ்மார்ட் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று கொண்டு வந்தார்.

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

இ-அடங்கல்  முறையில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பராமரிக்கும் நிலம் தொடர்புடைய 9 பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்யலாம். விஏஓக்களின்  பணிச்சுமை இ-அடங்கலின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

இ-அடங்கலை கொண்டு ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப் படும் ஜி-அறிக்கை மிக எளிதாக இறுதி செய்யப்படும். விவசாயி என்ன பயிரிடுகிறாரோ அதை அவரே இந்த இ-அடங்கலில் பதிவு செய்யலாம். இதனால் தவறு ஏற்பட வாய்ப்பு இருக்காது. துல்லியமான 100 சதவீதம் கணக்குகளை பெற முடியும்.

துல்லிய கணக்கெடுப்புக்கு..

விவசாயிகள் பதிவு செய்த விவரங்களை விஏஓக்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், உயர் அதிகாரிகளும் இருந்த இடத்தில் இருந்து கண் காணிக்க முடியும். 32 வருவாய் மாவட்டங்களிலும், எந்த இடத்

தில் என்ன பயிரிடப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அறியமுடியும். வெள்ளம், வறட்சி காலங்களில் சரியான கணக் கெடுப்புக்கு பெரும் ஆதாரமாக  இது அமையும். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, புள்ளி யியல் துறை அலுவலர்களும் கள ஆய்வில் கண்டறிந்த பயிர்சாகுபடி பதிவுகளை அளிக்க முடியும். பயிர் காப்பீடு பெறுதல், வங்கிக்கடன் பெறும் போதும் இ-அடங்கலை விவசாயிகள் உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதுதவிர, பேரிடர் மேலாண் மைத்துறை சார்பில், பல்வேறு பேரிடர்களின் அதீத தாக்கத்தை முன்னரே அறிந்து மீட்பு நடவ டிக்கைகளை முறைப்படுத்த ‘டிஎன்-ஸ்மார்ட்’ இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் நிற்கும் அளவைக் கொண்டு தயார் நிலையில் இருக்க டிஎன்-ஸ்மார்ட் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். முன்னெச்சரிக்கை தகவல் அடிப்படையில் பேரிடர் தாக்கங்களை குறைக்கலாம்.

பிரத்யேக செயலி

‘டிஎன்-ஸ்மார்ட்’ கைபேசி செயலி மூலம் களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்ப முடியும். அனைத்து பகுதிகளிலும் பெய்யும் மழைஅளவை தெரிந்து கொள்வதுடன், வானிலை முன்னெச் சரிக்கை அனுப்ப முடியும். குறி்ப்பாக வானிலை மையத்தால் வழங்கப்படும் மழை முன்னெச்சரிக்கை, கடந்தகால பருவமழை அளவு, நீர்த்தேக்கங்களின் இருப்பு அடிப் படையில் வெள்ள அபாயத்தை கணக்கிட்டு கூற முடியும். சுனாமி தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களையும் அளிக்கலாம். இதில் உள்ள செயலியானது தனிப்பட்ட எச்சரிக்கை ஒலி அமைப்பை கொண்டது. இதனால், அமைதி நிலை (சைலன்ட் மோடு)யில் உள்ள கைபேசியில் கூட எச்சரிக்கை தகவல்களை பெற முடியும். இந்த செய்தியை பயனாளிகள் பார்த்த பின்புதான் எச்சரிக்கை ஒலி நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x