Published : 28 Oct 2018 08:18 AM
Last Updated : 28 Oct 2018 08:18 AM

பத்திரப் பதிவின்போதே ஒப்புகை சீட்டு வழங்கும் வசதி அறிமுகம்: பட்டா மாறுதல் தொடர்பாக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை; நாளை முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பொருந்தும் என பதிவுத்துறை தலைவர் தகவல்

வருவாய்த் துறைக்கு இணைய வழி பட்டா மாறுதல் படிவம் அனுப் பப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய வசதி பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இத்துறையின் தலை வர் ஜெ.குமரகுருபரன் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பதிவுத் துறைக்கான ஒருங் கிணைந்த இணையம் அடிப்படை யிலான ஸ்டார் 2.0 திட்டம் முதல் வர் கே.பழனிசாமியால் தொடங்கப் பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதி யாக பட்டா மாறுதல் படிவம் (படி வம் 6) அனுப்பும் வசதி கணினி மயமாக்கப்பட்டு, பத்திரப்பதி வுக்குப் பின் பட்டா மாறுதல் படிவத் தினை இணையவழி வருவாய்த் துறைக்கு உடனுக்குடன் அனுப்பி அதன் ஒப்புகைச்சீட்டு எண்ணுடன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அனுப்பப்பட்ட போதும், மீண்டும் இதே சொத்துக்கு பொது சேவை மையத்தில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பங்கள் வந்தன. இதனால் ஒரே சொத் துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனுக் களை பெறும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஒப்புகைச் சீட்டு, அசல் ஆவணத்தை திரும்பப் பெறும்போது சார் பதிவாளரால் கையொப்பமிட்டு வழங்கப்படும். ஒப்புகைச் சீட்டில் வருவாய்த் துறையால் அளிக்கப் பட்ட விண்ணப்ப எண் அச்சிடப் பட்டிருக்கும்.

இந்த விண்ணப்ப எண்ணை ‘www.eservices.tn.gov.in’ என்ற இணையதளத்தில், விண்ணப்ப நிலை பகுதியில் (Know your application status) உள்ளீடு செய் தால், மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்துகொள்ள லாம்.

மேலும், ஆண்ட்ராய்டு கைபேசியில் ‘AMMA eservice of land records’ என்ற செயலியை பதி விறக்கம் செய்து இதில், விண் ணப்ப எண்ணை உள்ளீடு செய்து மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கையினை தெரிந்துகொள்ளலாம்.

பதிவுப்பணிகள் முடிவடைந்து அசல் பத்திரம் திரும்ப வழங்கப் படும் தேதி பத்திரப்பதி வின்போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்றைய தேதியில் பத் திரத்தை திரும்ப பெற்றுக்கொள் ளும் போது பட்டா மாறுதல் படிவம் வருவாய்த் துறைக்கு அனுப் பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை தவறாது கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும். தற்போது நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு பத்திரப்பதிவின்போது ஆவணதாரர்களிடமிருந்து பெறப் பட்ட பட்டா மாறுதல் படிவங் கள் சார்பதிவாளர் அலுவலகத் திலிருந்து வாரந்தோறும் வட் டாட்சியர் அலுவலகத்துக்கு நேரிடையாக வழங்கப்பட்டுவரும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்திரப்பதிவின் போது உட்பிரிவு தேவைப்படும் இனங் களுக்கு உட்பிரிவுக் கட்டணம் பதிவுத்துறையால் வசூலிக்கப் படுகிறது. இவ்வாறு வசூலிக்கப் பட்ட கட்டண விவரங்கள் இணைய வழி பட்டா மாறுதல் படிவத்துடன் வருவாய்த் துறைக்கு அனுப்பப் படுகிறது. ஆகவே, வருவாய்த் துறையில் தனியாக உட்பிரிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், பொதுமக்கள் யாரும் பத்திரப்பதிவு முடிந்தவுடன் தனி யாக பட்டா மாறுதல் படிவங்களை வருவாய்த்துறைக்கு அனுப்ப தேவையில்லை.

பட்டா மாறுதல் தொடர்பாக புகார் இருப்பின் 1800 425 1333 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இப்புதிய நடைமுறை நாளை (அக்.29) முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பொருந்தும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.பட்டா மாறுதல் தொடர்பாக புகார் இருப்பின் 1800 425 1333 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x