Published : 23 Oct 2018 10:00 AM
Last Updated : 23 Oct 2018 10:00 AM

தரமான தயாரிப்புகள் மக்கள் ஆதரவை பெறும்: ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் உறுதி

சமையல் பொருட்களை மருத்துவ குணத்தோடு, ருசி நிறைந்ததாக, மக்களால் வாங்கக் கூடிய விலையில் வழங்குவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் கூறினார்.

தமது நிறுவன தயாரிப்புகள் குறித்து அவர் கூறியுள்ளதாவது:

நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான மஞ்சள், மிளகு, தனியா, வெந்தயம், சீரகம், கிராம்பு, மிளகாய் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும். ஆச்சி மசாலா நிறுவனம் உணவே மருந்து என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.

இந்தியா முழுவதும் தேடி, தரமான விளைபொருட்களை அவை விளைவிக்கப்படும் மாநி லத்துக்கே சென்று விவசாயிகளி டமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம். அவற்றை உலகத் தரம் வாய்ந்த எங்கள் ஆய்வ கங்கள் மூலம் ஆய்வு செய்து, 'சோலார் சிஸ்டம்' மூலம் உலர்த்தி, இயற்கை தன்மை குறையாமல் பாதுகாக்கிறோம்.

மசாலா பொருட்களை வழக் கமான முறையில் அரைக்கும் போது சூடாகி அவற்றின் இயற்கை யான குணம் நசிந்துவிடும். எனவே 'கோல்டு பிரஸ் கிரைண்டிங்' என்ற நவீன முறையில் சூடாகாமல் அரைத்து நிறம், மணம், ருசி குறையாமல் பேக்கிங் செய்கிறோம்.

மேற்கண்ட செயல்முறையால் ஆச்சி மசாலாக்கள் மருந்தாகவும், விருந்தாகவும் மக்களுக்கு பயன் படுகிறது. இதற்கு எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை பெரும் பங்காற்றுகிறது.

உணவே மருந்து என்ற எங் களின் உன்னதமான கொள்கை யால் ஆரோக்கியம் மட்டுமின்றி, விவசாயமும் வளர்ச்சி பெற்றுள் ளது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் ஆரோக்கியமே எங்கள் லட்சியம்.

இவ்வாறு பத்மசிங் ஐசக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x