Published : 02 Aug 2014 09:00 AM
Last Updated : 02 Aug 2014 09:00 AM

கூட்டுறவுப் பணியாளருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் வாசித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் 783 கிளைகளுடன் குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகின்றன. சொந்த அடிமனைகள் கொண்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் 18 கிளைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் ரூ.12.6 கோடியில் கட்டப்படும்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் அமைப்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, 46 கிளைகளுடனும், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 783 கிளைகளுடனும் மற்றும் 120 நகரக் கூட்டுறவு வங்கிகள் 183 கிளைகளுடனும் பொது மக்களுக்கு பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன.

அனைத்து பகுதி மக்களுக்கும் கூட்டுறவு வங்கிகளின் சேவையை விரிவுப்படுத்த, ரூ.2 கோடியில் 19 மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள், 2 நகரக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் என மொத்தம் 21 புதிய கிளைகள் தொடங்கப்படும்.

தொடக்க வேளாண்மை கூட் டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கங்களில் பணியாற்றும் சுமார் 60,000 பணியாளர்கள், தங்களுக்கும் அரசு ஊழியர்களைப் போல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி வந்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் 60,000 பணியாளர்களுக்கும் நீட்டிக் கப்படும். இத்திட்டத்துக்கென ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் ரூ.12.54 கோடியைக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் சரி சமமாக ஏற்றுக் கொள்வார்கள்.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி வாடிக்கையா ளர்கள் தங்கள் கைபேசி மூலமாக வங்கிப் பணிகளை சிரமமின்றி மேற் கொள்ள ரூ.1 கோடியில் கைபேசி வங்கியியல் சேவை, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் அறிமுகப்படுத்தப்படும்.

பழங்குடியின மக்களுக்குத் தேவையான இடுபொருட்கள் மற்றும் இதர சேவைகள் அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்க, நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்ட தொல்பழங்குடியினர் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், கோத்தகிரி வட்ட மலைவாழ் பழங்கு டியினர் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில், சிட்டிலிங்கி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய புதிய 3 மலைவாழ் பழங்குடியினர் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x