Published : 13 Oct 2018 09:06 AM
Last Updated : 13 Oct 2018 09:06 AM

சென்னை துறைமுகத்தில் பன்னாட்டு பயணியர் முனையம்; ரூ.17 கோடியில் புதுப்பிக்கப்பட்டது: மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை துறைமுகத்தில் ரூ.17 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பன் னாட்டு பயணியர் முனையத்தை, மத்திய சுற்றுலாத் துறை இணை யமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் நேற்று திறந்து வைத்தார்.

பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத் தில் உள்ள பன்னாட்டு பயணியர் முனையம், ரூ.17.24 கோடி செல வில் புதுப்பிக்கப்பட்டது. இதன் தொடக்க விழா மற்றும் சென்னைத் துறைமுகத்தின் துறைமுக நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற் றது. சுமார் 2,880 சதுர மீட்டர் பரப் பளவு கொண்ட இந்த முனையத்தில் பயணிகளின் வசதிக்காக 4 நகரும் படிக்கட்டுகள், 10 குடியுரிமை கவுன்ட்டர்கள், சர்வதேச தரம் வாய்ந்த ஓய்வறைகள், பயணி களின் உடமைகளைச் சோதனை செய்யும் நவீன சோதனை மற் றும் கண்காணிப்பு கருவிகள், பயணிகள் அமர இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முனை யத்தை மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அடிப் படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “கடந்த 2014-ம் ஆண்டு ரூ.6 கோடி மட்டுமே லாபம் ஈட்டிய சென்னை துறைமுகம் தற்போது ரூ.230 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ், “மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்றதற்கு முன்பாக சர்வதேச அள வில் சுற்றுலாத் துறையில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. தற்போது 3-வது இடத்தில் உள்ளது. உள்நாட்டு, வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு மட்டும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 48.60 லட்சம் பேரும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 34.50 கோடி பேரும் தமிழகத்துக்கு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் சுற் றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.144 கோடி நிதி வழங்கியுள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரவீந்திரன், துணைத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ், தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் வி.பழனிகுமார் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய துறைமுக ஊழியர் களுக்கு அமைச்சர் அல்போன்ஸ் பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x