Published : 07 Oct 2018 06:57 PM
Last Updated : 07 Oct 2018 06:57 PM

‘என் அரசியல் அனுபவத்தில் ஏதோ நடக்கப்போவதை உணர்த்துகிறது’- ஆளுநரின் பேச்சுக் குறித்து துரைமுருகன்

துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி பணம் கைமாறியுள்ளதாக ஆளுநர் திடீரென பிரச்சினையை கிளப்புவது முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு கட்டியங்கூறுவதுபோல் உணர்த்துகிறது என்று துரைமுருகன் கூறினார்.

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டப் பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு குறித்து கேட்டனர் அதற்கு பதிலளித்த துரைமுருகன், இது பருவமழைக்காக ஒத்திவைத்ததுபோல் எனக்கு தெரியவில்லை. எதற்கோ பயப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் ஆளுநர் பன்வாரிலால் துணைவேந்தர்கள் குறித்து பேசிய பேச்சுக்கு பதிலளித்த அவர் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் இப்போது பேசுவது ஏன். ஆளுநர் வேற்று மாநில ஆட்களை துணைவேந்தர்களாக நியமித்தபோதே பிரச்சினை உண்டானது. அப்போதே இந்த விஷயத்தை அவர் பேசியிருக்கலாமே என்று கூறினார்.

மேலும் ஆளுநர் திடீரென இப்போது இவ்வாறு பேசுவது என்னுடை நீண்ட அரசியல் அனுபவத்திலிருந்து கூறுகிறேன், வேறு எதையோ இது உணர்த்துகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வருமோ, வராதோ எனக்குத் தெரியாது. ஆனால் விடியும் முன் சேவல் கூவுவது எதையோ உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x