

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் எம்.வி.கருப்பையா (சோழவந்தான்), தேமுதிக உறுப்பினர் எல்.வெங்கடேசன் (திருக்கோவிலூர்) ஆகியோர், ‘தமிழகத்தில் நலிவ டைந்த கூட்டுறவு சங்கங்களைப் புனரமைக்க அரசு ஆவன செய்யுமா?’ என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற் றிருந்தன. திமுக ஆட்சிக் காலத்தில் 2,886 கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே நல்ல நிலையில் இருந்தன. ஆனால், முதல்வர் மூன்றாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, அதிமுக ஆட்சிக்காலத்தில் 1,553 கூட்டுறவு சங்கங்கள் புனர மைக்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழகத்தில் 4439 கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. மேலும் 2,304 தொடக்கக் கூட்டுறவு வேளாண் சங்கங்கள் ரூ.5 கோடியை லாபமாக ஈட்டியுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.