Published : 13 Oct 2018 09:09 AM
Last Updated : 13 Oct 2018 09:09 AM

பிரபலங்களை உலுக்கி வரும் ‘மீ டூ’ ட்விட்டர் பிரச்சாரம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கனிமொழி ஆதரவு

பணி செய்யும் இடத்தில் தங்க ளுக்கு நேரும் பாலியல் துன்புறுத் தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக அடையாளம் காட்டும் வகையில் ‘மீ டூ' (நானும் தான்) என்ற தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட ஒரு பெண் ணுக்காக ‘மீ டூ’ என்ற பெயரில் ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவே தற்போது ட்விட்டர் பிரச்சாரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஹாலிவுட் படத் தயாரிப்பாளரின் பாலியல் அத்து மீறலை அம்பலப்படுத்தும் விதமாக தொடங்கிய இந்தப் பிரச்சாரம், மெல்ல மெல்ல உலகின் பல்வேறு நாட்டுப் பெண்களாலும் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை தனு தத்தா, படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாகப் புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் உட்பட பலருக்கு எதிராகவும் ‘மீ டூ' பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைப் பெண்கள் தெரிவித்தபடி உள்ளனர்.

இந்தப் பிரச்சாரத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட ஏராளமான பெண் பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பதோடு, பாதிக் கப்பட்ட பெண்கள் யாராக இருந் தாலும் இதுபோல வெளிப்படை யாக வர வேண்டும் என்று தைரி யம் அளித்தபடி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் அடுத்தடுத்து, ‘மீ டூ' ஹேஷ்டேக்கில் புகார் தெரிவித்துள்ளதும் பரபரப்பையும் பலத்த விவாதங்களையும் ஏற் படுத்தியுள்ளது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த வைரமுத்து, ‘‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப் படுத்தப்பட்டு வருகிறேன். அவற் றுள் இதுவும் ஒன்று. உண்மைக் குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண் மையைக் காலம் சொல்லும்'' என தெரிவித்துள்ளார்.

கனிமொழி ஆதரவு

பாடகி சின்மயியின் கருத்துக்கு திரைப்பட பிரபலங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலை யில், ‘மீ டூ' பிரச்சாரத்துக்கு மாநிலங் களவை குழுத் தலைவர் கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘மீ டூ' பிரச்சாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே சுய பரி சோதனை செய்துகொள்ள வேண் டும். உண்மையை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை நாம் ஆதரிப்போம். முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களைப் பெண் கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர் களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு நியாயம் கிடைக்கும்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x