Published : 05 Oct 2018 08:06 AM
Last Updated : 05 Oct 2018 08:06 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பாலியல் வன்முறை, இதர குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு: புதிய திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

பாலியல் வன்முறையில் பாதிக் கப்பட்ட, உயிரிழந்த மற்றும் இதர குற்றச் சம்பவங்களில் பாதிக் கப்பட்ட பெண்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புதிய திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் நிர்புன் சக்சேனா இடையிலான வழக்கில் அளிக் கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இந்த புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பாலியல் வன்முறை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண், அவரைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தாலோ, காயமடைந்தாலோ, அவர் களுக்கு மறுவாழ்வு தேவைப் பட்டாலோ அதற்கான இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்டவரின் கணவர், தந்தை, தாய், தாத்தா, பாட்டி, திருமணமாகாத மகள், மைனர் குழந்தைகள் ஆகியோர் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அல்லது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு பெற முடியும். இதற்காக மாநில அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது மத்திய பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டு திட்டம், தமிழக நிதிநிலை அறிக் கையின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் இருந்து பெறப்பட்ட இழப்பீடு, பல்வேறு அரசு, தனியார் அறக்கட்டளைகளிடம் இருந்து பெறப்பட்ட நிதி உள்ளிட்டவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

13 வகையான பாதிப்புகள்

இந்த நிதியைப் பெற, ஒரு பெண் மிகவும் கடுமையாக மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, காயமடைந்திருக்க வேண்டும். இதற்காக அதிக அளவில் மருத்துவச் செலவுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உடல், மன பாதிப்பினால் கல்வி பயிலும் வாய்ப்பு, பணியாற்றும் வாய்ப்பை இழந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 வகையான பாதிப்புகள் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த இழப்பீட்டைப் பெற மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள புதிய திட்டப்படி பாதிக்கப்பட்டவர் இறந்தால் ரூ.5 முதல் 10 லட்சம் வரையும், குழு பாலியல் வன்முறை ரூ.5 முதல் 10 லட்சம், பாலியல் வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் ரூ.4 முதல் 7 லட்சம் வரையும் இழப்பீடு பெற முடியும்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமுற்றால், ரூ.3 லட்சத்தில் இருந்து 4 லட்சம் வரையும் அளிக்கப்படும். தீ வைக்கப்பட்டதில், முகம் பாதிக்கப்பட்டால் ரூ.7 முதல் 8 லட்சமும், 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டால் ரூ.5 முதல் 8 லட்சமும், 50 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.3 முதல் 7 லட்சமும் இழப்பீடாகக் கிடைக்கும்.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு முகம் பாதிக்கப்பட்டால் ரூ.8 முதல் 10 லட்சமும், 50 சதவீதத்துக்கும் அதிக பாதிப்புக்கு ரூ.5 முதல் 8 லட்சமும், இழப்பீடாகக் கிடைக்கும்.

இவ்வாறு தமிழக அரசிதழில் உள்துறையால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x