Published : 04 Oct 2018 10:31 AM
Last Updated : 04 Oct 2018 10:31 AM

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தஇளைஞரின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கருவிழி ஆகியவை 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் பெற்ற அனைவரும் நலமுடன் உள்ளதாக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் அஜய் சில்வஸ்டா (22). இவர் கடந்த செப்.28-ல் காரைக்காலில் நிகழ்ந்த சாலை விபத்தில் தலையில் காயம்அடைந்தார். காரைக்கால் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

வேதனையான சூழலிலும், அஜஸ் சில்வஸ்டாவின் தந்தை பால்ராஜ், தாய் ஜெயலட்சுமி ஆகியோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்தனர். இதுதொடர்பாக ஜிப்மர் தரப்பில் கூறும்போது, "இளைஞர் அஜய்சில்வஸ்டாவின் இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழி ஆகியவை தானமாகபெறப்பட்டன. இதில் 2 சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் 2 கருவிழிகள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு கடந்த 30-ம் தேதி பொருத்தப்பட்டன. இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை தமிழ்நாடு உறுப்பு மாற்று அதிகாரத்தின் ஒருங்கிணைப்பின் மூலம்சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது" என்றனர்.

முன்மாதிரியான குடும்பத்தினர்அஜய் சில்வஸ்டா குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஜிப்மர் இயக்குநர் டாக்டர் விவேகானந்தம் கூறும்போது, "ஏழ்மையான குடும்பச் சூழலிலும் தங்கள் மகன் மூலம் உயிருக்கு போராடும் 7 பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்து முன்மாதிரியாகியுள்ளனர். உடல்உறுப்பு தானம் பெற்ற அனைவரும் நலமுடன் உள்ளனர்.

ஜிப்மரில் பல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்புபிரிவினை அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். இதுவரை 173 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கடந்த 2017 முதல் 5 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஏராள

மானோருக்கு கண் மாற்று சிகிச்சை தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x